டெல்லி: வெனிசுலாவில் இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவுக்கு இந்தியர்கள் தேவையின்றி செல்ல வேண்டாம். cons.caracas@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புக்கொள்ளலாம். அவசர தொலைபேசி எண் +58-412-9584288-ஐ தொடர்புகொள்ளலாம்”
