ராய்கர்: சட்டீஸ்கரில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்குள்ள ராய்கர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27ம் தேதி தம்னார் வட்டாரத்தில் சுமார் 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர் வயல்வெளியில் கும்பலுக்கு நடுவே தனியாக சிக்கிக்கொண்டார். அந்த கும்பல் அந்த பெண் காவலரை தாக்கி, அவரது உடைய கிழித்தனர். அவர் தரையில் படுத்தப்படி கைகூப்பி தன்னை விட்டுவிடும்படி மீண்டும் மீண்டும் அவர்களிடம் கெஞ்சுகிறார்.
என் ஆடைகளை கிழிக்காதீர்கள் அண்ணா. நான் எதுவும் செய்யமாட்டேன் நான் யாரையும் அடிக்க மாட்டேன் என்று கெஞ்சுகிறார். இருப்பினும் ஒருவர் அவரது கிழிந்த சீருடையை இழுப்பதும், மற்றொருவர் இந்தத் தாக்குதலைப் படம்பிடித்து, பின்னர் செருப்பைக் காட்டி அவரை மிரட்டி, கத்துவதும் வீடியோவில் காணப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியான நிலையில் பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 5 பேரை கைது செய்தனர். இருவர் தலைமறைவாக உள்ளனர்
