புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த 2020ல் டெல்லியில் மிக பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் 53 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களான உமர் காலித் உள்ளிட்டோர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்(உபா) கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உமர் காலித் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார் மற்றும் அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை அறிவிக்க உள்ளது.
