- காம்பியா
- பஞ்சுல்
- ஆப்பிரிக்கர்கள்
- ஐரோப்பா
- அட்லாண்டிக் கடற்கரை
- மேற்கு ஆப்பிரிக்கர்
- செனகல்
- மவுரித்தேனியா
பஞ்சுல்,: ஐரோப்பாவில் சிறந்த வாய்ப்புக்களை தேடி ஏங்கும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் அட்லாண்டிக் கடற்கரையோரமாக படகுகளில் தங்களது உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இது மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையை காம்பியா, செனகல் மற்றும் மவுரித்தேனியா வழியாக இணைக்கும் உலகின் மிகவும் அபாயகரமான புலம்பெயர்ந்தோர் வழித்தடங்களில் ஒன்றாகும். இந்நிலையில் சுமார் 200 அகதிகளுடன் ஐரோப்பாவிற்கு சென்றுகொண்டு இருந்த படகு காம்பியா கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடந்த ஒன்றாம் தேதி நடந்த இந்த விபத்தில் இதுவரை 102 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. 90க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவசரகால மீட்பு குழுவினருடன் உள்ளூர் மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
