சென்னை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தரப்படுத்தவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கக் கூடியதே. அனைத்து அரசு ஊழியர்கள் சார்பில் முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.
