மதுரை, ஜன. 3: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து கேரளா மாநிலம் கொச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை – தேனி மார்க்கத்தில் அச்சம்பத்து புறவழிச்சாலைஅமைக்கும் பணி நடக்கிறது. அதேநேரம் அச்சம்பத்துவிலிருந்து முடக்குச்சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள அணுகுசாலை வரை சுமார், 2.5 கி.மீ தூரத்திற்கு பலத்த சேதமடைந்து ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
