×

மாநகராட்சி சார்பில் செல்லூரில் ரூ.50 லட்சத்தில் உருவாகிறது ‘மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்’

மதுரை, ஜன. 3: மதுரை, செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு கபடி சிலை ரவுண்டானா அருகே ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 75 சென்ட் இடம் மீட்கப்பட்டது. இவ்விடத்தில், மாநகராட்சி கமிஷனர் சித்ரா முயற்சியின் அடிப்படையில் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து மாநகராட்சி ‘மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்’ அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கிரவுண்டை மாநகராட்சி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் இணைந்து தனியார் பங்களிப்பில் ரூ.50 லட்சத்தில் இந்த கட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் முதற்கட்டமாக ரூ.5 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ள நிலையில், இங்கு வாலிபால், இறகுப்பந்து, கிரிக்கெட் நெட் பயிற்சி, கோகோ, சிலம்பம், கபடி உள்ளிட்ட விளையாட்டுக்கான கட்டமைப்புகளும், சிறப்பு ஜிம் வசதியும், நடைப் பயிற்சிக்கான டிராக்குகளும் அமைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை இப்பகுதி இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

 

Tags : Sellur ,Madurai ,Kabaddi Statue Roundabout ,Sellur Bridge Station Road, Madurai ,Chitra ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு