×

திண்டுக்கல் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

திண்டுக்கல் ஜன. 3: திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி சுக்காமேடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டவர் (23). கூலித்தொழிலாளி. இவரும், அவரது அண்ணன் ரஞ்சித் குமாரும் (26) நேற்று முன்தினம் நந்தவனபட்டியில் இருந்து தோமையார்புரம் செல்ல பழநி சர்வீஸ் ரோட்டில் இருந்து வத்தலக்குண்டு சர்வீஸ் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரை ஆண்டவர் ஓட்ட, ரஞ்சித் குமார் பின்னால் அமர்ந்து வந்தார்.

கொட்டப்பட்டி அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு வேன் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும், அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே ரஞ்சித் குமார் உயிரிழந்தார். ஆண்டவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : Dindigul ,Andavar ,Sukkamedu ,Nandavanapatti ,Ranjith Kumar ,Palani Service Road ,Vattalakundu Service Road ,Thomaiyarpuram ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு