- விராலிமலை முருகன் கோயில்
- புத்தாண்டு விழா
- வீரலிமலை
- விராலிமலை முருகன் மலை கோயில்
- தமிழ் புத்தாண்டு ஈவ்
- புதுக்கோட்டை மாவட்டம்
- விராலிமலை முருகன் மலாய்கோய்
விராலிமலை, ஜன.3: ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி விராலிமலை முருகன் மலைக் கோயிலில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயில் பல்வேறு சிறப்புகள் பெற்ற தலமாகும் அறுபடை வீடுகளுக்கு இணையாகக் கருதப்படும் இந்த மலை கோயில் மலையின் மேல் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மேல் அமர்ந்து முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
அஷ்டமாசித்து எனும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை இத்தலத்தில் தான் முருகன் அருணகிரிநாதருக்கு கற்றருளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன. ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் கோயிலில் நேற்று ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
நள்ளிரவில் இருந்து 207 படிகளிலும் காத்திருத்த பக்தர்கள் சமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்ட போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.
