கறம்பக்குடி, ஜன.3: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மேற்கு பகுதியை சேர்ந்தவர் சூரியகலா (23). இவரது கணவர் செல்வகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். சூரியகலா தனது 2 குழந்தை களுடன் கடந்த 29ம் தேதி மாலை மன்னார்குடியில் உள்ள அவரது அக்கா சூர்யா வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்க பட்டு வீட்டில் இருந்த பீரோலில் இருந்த 50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இச்சம்பவம் குறித்து சூரியகலா கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
