×

அரியலூரில் பொது இடங்களில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 141 பேர் மீது வழக்குப்பதிவு

ஜெயங்கொண்டம், ஜன. 3: அரியலூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 30, 31ம் தேதி போலீசார் நடத்திய குற்றதடுப்பு நடவடிக்கையில் 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் கடந்த டிச.30 மற்றும் 31ம்தேதி ஆகிய இரு தினங்களில் காவல்துறையினர் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 68 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பொது இடம், சாலைகளில் அதி வேகமாக வாகனம் ஓட்டிச் சென்றவர்கள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 129 வாகனங்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய ஆவணங்கள் கொண்டு வந்ததவர்களின் வாகனங்கள் மறுநாள் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

 

Tags : Ariyalur ,Jayankondam ,Ariyalur district ,Vishwesh Pa ,Shastri ,
× RELATED அஞ்சலக கணக்குகளை புதுப்பிக்க வாய்ப்பு