நாகப்பட்டினம், ஜன.3: நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக மாநாட்டு கூட்டரங்கில் காலை 10 மணிக்கு கலெக்டர் ஆகாஷ் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
