- அமைச்சர்
- சேகர் பாபு
- சாவர்க்கர்
- நாகர்கோவில்
- சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவில்
- குமாரி மாவட்டம்
- தமிழ்நாடு அறக்கட்டளைகள்
- சேகர் பாபு பாபு
- பால் வளம்
- மனோ தங்கராஜ்.…
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் காவி துண்டு அணிந்து பங்கேற்ற சிலர், தேரோட்டம் தொடங்கும் போது வீர சாவர்க்கருக்கு ஜெ… வீர சிவாஜிக்கு ஜெ… என்பன போன்ற முழக்கங்களை எழுப்பினர். கோஷம் எழுப்பியவர்களை பலர் கண்டித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டி: திமுக ஆட்சிக்கு வந்த பின், இதுவரை தமிழ்நாடு முழுவதும் 3967 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 4 ஆயிரமாவது கோயில் கும்பாபிஷேகமாக சென்னை ரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரியில் நடக்க உள்ளது. இறைவழிபாடு புனிதமானது. இறைவழிபாட்டின் போது தேவையில்லாத கோஷங்களை இங்கு சிலர் எழுப்பினர். கோஷங்கள் எழுப்பவர்களிடம் இறைவழிபாட்டின் போது தேவையற்ற கோஷங்களை எழுப்பி இடையூறு ஏற்படுத்தாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
