×

நயினாருக்கு பாஜ நிர்வாகி கருப்பு கொடி

ஊட்டி: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ஊட்டியில் பிரசாரம் செய்தார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குன்னூரில் இருந்து கார் மூலம் ஊட்டிக்கு வந்தார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவசாய அணி நிர்வாகி வைஷாலி என்பவர், நயினார் நாகேந்திரன் வாகனத்தின் முன்பாக ஓடிவந்து கருப்பு கொடி காட்டினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வைஷாலியை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அவர் தனக்கு நியாயம் வேண்டும் என கோஷமிட்டார்.

Tags : BJP ,Nainar ,Ooty ,president ,Nainar Nagendran ,Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள்...