×

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து 5ம் வகுப்பு மாணவன் நேரில் கடிதம்

சேத்துப்பட்டு: பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தி வருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, சேத்துப்பட்டு அரசு பள்ளி மாணவன் நேரில் கடிதம் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த வேளாண் துறை கண்காட்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், கலசப்பாக்கத்தில் கலைஞரின் உருவச்சிலையை திறந்து வைத்து விட்டு சேத்துப்பட்டுக்கு வந்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளி 5ம் வகுப்பு மாணவனான உமர் என்பவர், ‘முதல்வரின் காலை உணவு திட்டத்தில் தான் பயன்பெறுவதாகவும், அதேபோல் அனைத்து மாணவ, மாணவிகளும் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுவதாகவும், எனவே, தமிழக முதல்வருக்கு நன்றி’ என்று தனது கைப்பட கடிதம் எழுதி அதனை முதல்வரிடம் வழங்கினார். கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு அந்த மாணவனுக்கு நன்றி கூறினார்.

Tags : Chief Minister ,Chettupattu ,M.K. Stalin ,Tiruvannamalai district ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள்...