×

அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில்

நமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.இக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார் இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார்.கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், “கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே.

அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே? என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து, “இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர்.இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்? என அழுது புலம்பினார் அப்போது இறைவன் அசரீரியாக, அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சந்நதியில் விளக்கேற்றவும் என கூறினார் இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது. உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.இந்த தெய்வத்திற்கு நவகிரகங்களும் நாமகரணம் செய்திருக்கிறது. சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.
* பௌர்ணமி நாளில் சங்க தீர்த்தம் புனித நீர் எடுத்து சுயம்பு மூர்த்தி என அசலைஸ்வரருக்கு அபிஷேகம் செய்து இந்திராச்சனை செய்து வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார்கள்.
* ஏழாம் பாவகம் மற்றும் 8ம் பாவகத்தில் சுக்கிரன் இருந்தால் அது காரோக பாவ நாஸ்தி. பூரம் நட்சத்திர நாளில் வெள்ளை மொச்சை நைவேத்யம் செய்து மஞ்சள் பட்டு வஸ்திரம் கொடுத்து கோயிலுக்கு வரும் கன்னிப் பெண்களுக்கு தானம் செய்தால் தோஷம் விலகும்.
*ஜாதகத்தில் 2ம் பாவகத்தில் சந்திரன் இருந்தாலும் சந்திரன் உச்சம் பெற்று இருந்தால் இங்குள்ள தீர்த்தத்தில் சிறிது தீர்த்தம் எடுத்து அதில் பசும்பால் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து மகாவிஷ்ணு அர்ச்சனை செய்து வந்தால் பொன் சேர்க்கை நடைபெறும். வாழ்வில் சுபிட்ஷ பலன்கள் உண்டாகும். மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம்.

Tags : Arulmigu ,Asaleswarar Temple ,Naminandiyadigal ,Nayanmars ,Putridankondeesar ,Thiruvarur ,temple ,Araneri ,Lord ,Shiva ,Araneriappar ,
× RELATED பாவங்கள் போக்கும் பவானி யோகினி