×

மதுரை-சென்னை விமான கட்டணம் 2 மடங்கு உயர்வு

 

மதுரை: கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மதுரையில் இருந்து சென்னை செல்லும் விமானக் கட்டணம் 2 மடங்காக உயர்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரையில் இருந்து சென்னைக்கு தினசரி காலை, இரவில் தலா ஒருமுறை, மதியத்தில் 2 முறை என 4 முறை விமானம் இயக்கப்படுகிறது. இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் 3 சேவைகளும், ஏர் இந்தியா சார்பில் 1 சேவையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை முடிந்து மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கான விமானக் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளது. வழக்கமாக மதுரை-சென்னை கட்டணம் ரூ.4,300 ஆக உள்ள நிலையில், வரும் ஞாயிறன்று மட்டும் ரூ.8,800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், விமானப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Tags : Madurai ,Chennai ,Christmas festival ,
× RELATED தனியார் பேருந்துகளை வாடகைக்கு...