×

கோவை குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை!!

கோவை: கோவை குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் ரூ.10,000 பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஜெபா மார்ட்டின் குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : SHAWARAN ,KOWAI KUNIAMUTHUR ,KOWAI ,JEWELS ,Jeba Martin ,Tuticorin ,
× RELATED வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான...