×

பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருப்பு

 

சென்னை: பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறார். தீப்பெட்டி தொழிலாளர் பிரச்சனை குறித்து பியூஷ் கோயலிடம் கோரிக்கை மனு அளிக்க கடம்பூர் ராஜு சென்றார். கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கும் முன்பே பியூஷ் கோயலை சந்திக்க கடம்பூர் ராஜு சென்றுள்ளார். ஆனால் கூட்டம் முடிந்த பிறகே பியூஷ் கோயலை சந்திக்க முடியும் என பாஜக நிர்வாகிகள் கூறியதால் கடம்பூர் ராஜு காத்திருக்கிறார்.

Tags : AIADMK ,Minister ,Kadambur Raju ,BJP ,Kamalalayam ,Chennai ,Piyush Goyal ,Kamalalayam… ,
× RELATED 428 நாட்களாக 100-அடிக்கு மேல் நீடிக்கும்...