×

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி முதியவர், மனைவியுடன் கலெக்டர் ஆபீசில் தர்ணா

ஊட்டி : பந்தலூர் அருகே நெல்லியாளம் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது மனைவியுடன் நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். பின்னர் கையில் தன்னுடைய 20 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பதாகையுடன் கலெக்டர் வாகனத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து முதியவர் கூறியதாவது: 1984ம் ஆண்டு இலங்கையில் இருந்து நீலகிரிக்கு வந்தேன். இங்கு நான் கடுமையாக உழைத்து 20 சென்ட் நிலம் வாங்கினேன். அந்த நிலத்தை தற்போது வரை நான் பயன்படுத்தி வருகிறேன்.

இந்நிலையில், இதே பகுதியை சேர்ந்த நபர், எவ்வித ஆவணமுமின்றி எனது நிலத்தை தனது நிலம் என கூறி ஆக்கிரமித்து கொண்டு எங்களை மிரட்டி வருகிறார்.

எங்கள் நிலத்தை மீட்டு தரக் கோரி கலெக்டர், காவல்துறை என பலரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ooty ,Masilamani ,Nellialam ,Pandalur ,Collector ,
× RELATED எஸ்ஐஆருக்கு பிறகு வெளியிடப்பட்ட...