×

கடையால் அரசு மாதிரி பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

அருமனை, டிச.22: அருமனை அருகே கடையாலில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கடையால் பேரூராட்சி தலைவி ஜூலியட் கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், பெற்றோர் வளர்ச்சி குழு தலைவர் ஸ்ரீ கண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Kadayal Government Model School ,Arumanai ,Tamil Nadu government ,Government Model Higher Secondary School ,Kadayal ,headmaster ,Selvan ,Kadayal Town Panchayat ,
× RELATED ஓய்வூதியர் தின விழா