- தஞ்சாவூர்
- ஆட்சியர்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- தியாகராஜன்
- அரசு கண்காட்சி 2025
- செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை
- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...
தஞ்சாவூர், டிச.20: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி 2025க்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் விரைவில் 45 நாட்கள் மாபெரும் அரசு பொருட்காட்சி நடைபெற உள்ளது.
இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, உயர்கல்வித் துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப் பணித்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரங்கங்களும், பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வகை சார்ந்த உணவு அரங்குகள் இடம் பெற உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை விரைவாகவும். சிறப்பாகவும் முடித்திடுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணை இயக்குநர்(திட்ட இய்அக்குநர்) அருண்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தவச்செல்வம், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக்ராஜ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
