தூத்துக்குடி, டிச. 20: காப்பீட்டுத் துறையில் அன்னிய மூலதன உச்சவரம்பை 100 சதவீதம் உயர்த்தும் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காப்பீட்டுத் துறையில் அன்னிய மூலதன உச்சவரம்பை 100 சதவீதம் உயர்த்தும் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கம் ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ மற்றும் ஜிஐசி மற்றும் முகவர்கள் முதல்நிலை அதிகாரிகள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், பென்சன்தாரர்கள் சார்பில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கோட்ட சங்க இணை செயலாளர் சீனிவாசன் துவக்கவுரை ஆற்றினார். பிஇஎப்ஐ சார்பாக தங்கமாரியப்பன், ஏஐபிஇஏ சார்பாக கிருஷ்ணமூர்த்தி, எல்ஐசி பென்சனர் சங்கம் சார்பாக சேகர் ஆகியோர் விளக்க உரையாற்றினர். சிஐடியு மாநில துணை தலைவர் ரசல் நிறைவுரை ஆற்றினார். மகளிர் துணை குழு இணை அமைப்பாளர் ரமணி நன்றி கூறினார்.

