×

கோவில்பட்டி ஜி.ஹெச்சில் ரூ.20 லட்சத்தில் சுகாதார வளாகம்

கோவில்பட்டி, டிச. 20: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை நகராட்சி சேர்மன் கருணாநிதி திறந்து வைத்தார். கோவில்பட்டி நகராட்சி தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் சுகந்தி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வித்தார். சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகராட்சி சேர்மனும், நகர திமுக செயலாளருமான கருணாநிதி பங்கேற்று கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர திமுக கிழக்கு பொறுப்பாளர் சுரேஷ், 21வது வார்டு கவுன்சிலர் உலகராணி, நகராட்சி உதவி பொறியாளர் திவாகர், செயற்பொறியாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துபாண்டி ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kovilpatti ,GH ,Municipal Chairman ,Karunanidhi ,Kovilpatti Government Hospital ,Kovilpatti Municipality ,District Government Headquarters Hospital ,
× RELATED சங்கரன்கோவிலில் அன்பழகன் பிறந்தநாள் விழா