×

மரக்காணம் அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது

மரக்காணம், டிச. 18: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கழிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை(55). இவரது வீட்டில் புதுவை மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஞ்சலை வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் 90 மில்லி அளவு கொண்ட 90 புதுவை மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அஞ்சலையை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் புதுவை பகுதியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து இப்பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து அஞ்சலையை கைது செய்தனர்.

Tags : Marakkanam ,Anjalai ,Kalikuppam ,Villupuram district ,Puducherry ,Inspector ,Paraninathan ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது