- தூத்துக்குடி
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு
- தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம்...
தூத்துக்குடி, டிச. 17: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வாரியர் தலைமை வகித்தார். இதில் சங்கச் பொருளாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, யூ ஜனா, முனீஸ்குமார், பிரவீன்குமார், வழக்கறிஞர்கள் கிஸிங்கர், சோனராஜன், மந்திரமூர்த்தி, நம்பிராஜன், அர்ஜூன், செந்தில்குமார், ரமேஷ்பாபு, தங்கராஜ் மூர்த்தி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் தூத்துக்குடியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் நடைபெறவில்லை. விசாரணைக்கு வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
