குளச்சல், டிச.17: குளச்சல் அருகே கோடிமுனை பகுதியை சேர்ந்தவர் பஜினோ ராபின் (40) . மீனவர். இவர் குளச்சல் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண் ணுக்கு போன் செய்து, தவறான உறவுக்கு வருமாறு அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று அப்பெண் தான் பணியாற்றும் ஜவுளிக்கடையில் தனது பிள்ளைகளுடன் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற பஜினோ ராபின் தன்னுடன் தவறான உறவுக்கு வர மறுத்த பெண்ணை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது பிள்ளைகளையும் தாக்கி உள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த பெண் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மீனவர் பஜினோ ராபின் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.
