×

பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் சிக்கினார் பட்டப்பகலில் வீடு புகுந்து

வேலூர், டிச.16: காட்பாடி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அருகே கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டில் குளித்துவிட்டு ஆடை மாற்றிக்கொண்டிருந்தாராம். அப்போது பட்டப்பகலில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான, தசரதன் என்கிற அப்புன்(40) என்பவர் திடீரென பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த அப்புன் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அப்புனை நேற்று கைது செய்தனர்.

Tags : Vellore ,Katpadi ,
× RELATED காதல் மனைவி தற்கொலை வழக்கில்...