மும்பை: கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி நிகழ்ச்சியின்போது வன்முறை வெடித்து, பாதியில் நிகழ்ச்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், மும்பையில் இன்று மெஸ்ஸியின் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மும்பை போலீசார் கூறுகையில், ‘கொல்கத்தாவில் நடந்த சம்பவம் போன்று மும்பையில் நடக்காமல் இருக்க, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம்’ என்றனர். மெஸ்ஸி, மும்பையில், பிராபோர்ன் ஸ்டேடியத்தில், கோட் கோப்பை நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பலதுறை பிரபலங்கள் பங்கேற்கும் செலிப்ரிடி கால்பந்து போட்டியில் மெஸ்ஸி ஆடவுள்ளார்.
