×

மேகதாது அணை வழக்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வெளிவந்ததால், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான பணிகளை தொடங்கி விட்டது. தமிழ்நாடு அரசு,உச்ச நீதிமன்றத்தில்,தீர்ப்பை மறு ஆய்வு செய்திட வலியுறுத்தி . சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு பின் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவில் வெளியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான செயல் இது என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருப்பது நியாயமானது.

இந்த தீர்ப்பு வந்த உடனேயே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில அளவில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். எனவே தமிழக முதல்வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராட்டி நன்றி கூறுகிறோம். காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணையை கட்டிட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முதலில் ஒன்றிய அரசின் நீர்வளத் துறையிடம் அனுமதி கோரியது ..

ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் இதற்கான அறிக்கை கொடுத்து அனுமதி கோரியது… இத்துறையும் விரிவான அறிக்கையை கர்நாடக அரசிடம் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஆணையக்கூட்டத்தில் இதை விவாதப்பொருளில் சேர்த்து விவாதித்திடும் நிலையில் நிகழ்ச்சி நிரலில் சேர்த்து இருந்ததை…. தமிழகத்தின் எதிர்ப்பால்,,தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியாமல் காவிரி ஆணையம் ஒத்தி வைத்தது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் தமிழ்நாடு அரசின் சார்பாக பங்கு கொண்ட நமது உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து முறியடித்தனர்.

இதன் பின் தான்… காவிரி ஆணையக்கூட்டத்தில் மேகதாதுஅணைக்கான அறிக்கையை விவாதித்திட , காவிரி ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை கர்நாடகம் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து வாதாடிய நிலையிலும்,, காவேரி ஆணையக்கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணைக்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது….

என்பது தமிழகத்திற்கான அநீதியாகும்.இதற்கு முன்னேயே காவேரி ஆணையமும், ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறையும், இதற்கு இசைவாக இருக்கும் நிலையில்.. இந்த தீர்ப்பு விரைவாக மேகதாது அணை கட்டுமானத்திற்கான அனுமதி யாக கருதி, கர்நாடக அரசு இதற்கான செயல்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே மறு சீராய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Tags : Mekedatu Dam ,Tamil Nadu Farmers Association ,Tamil Nadu government ,Chennai ,General Secretary ,Masilamani ,Supreme Court ,Karnataka government ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...