- செல்வப்பெருந்தகை
- சிவராஜ் பாட்டில்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- மக்களவை
- சபாநாயகர்
- காங்கிரஸ்
சென்னை: முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் மக்களவை முன்னாள் தலைவருமான சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்ததாவது; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சருமான திரு.சிவராஜ் பாட்டில் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், நாட்டிற்கும், அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் அழியாதது. அவரின் நினைவு நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக என்றும் நிலைத்து நிற்கும். திரு.சிவராஜ் பாட்டில் அவர்களது இழப்பு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பேரிழப்பாகும், இயக்கத் தோழர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
