×

ரூ.37 கோடிக்கு தனி விமானம் வாங்கி சொகுசு வாழ்க்கை; ரெஃபெக்ஸ் குழுமம் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை தகவல்

சென்னை: ரெஃபெக்ஸ் குழுமத்தில் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், மும்பை உள்ளிட்ட 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பை, சென்னை, காஞ்சிபுரம் உள்பட ரெஃபெக்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், மும்பை உள்ளிட்ட 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் ரூ.70 கோடிக்கும் மேல் கணக்கில் வராத தங்கம், வெள்ளி, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் தொடர்புடையவர்கள் ரூ.37 கோடிக்கு தனி விமானம், ரூ.10 கோடிக்கு சொகுசு கார்கள் வாங்கியது அம்பலமாகியுள்ளது. ரூ.1,112 கோடி நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான போலி ஆவணங்களும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் தொடர்புடையவர்கள் ரூ.37 கோடிக்கு தனி விமானம், ரூ.10 கோடிக்கு சொகுசு கார்கள் வாங்கியது அம்பலமாகியுள்ளது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சுமார் ரூ.365 கோடி முதலீடு செய்யப்பட்டதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடுகள் செய்ததும் வருமானவரித்துறை சோதனையில் தெரியவந்தது. 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Refex Group ,Income Tax Department ,Chennai ,Kancheepuram ,Mumbai ,Refex ,Kanchipuram ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத்தொகை...