×

சேலம் விமான நிலையத்தில் தடையில்லாத போக்குவரத்து

ஓமலூர், டிச.11: சேலம் விமான நிலையத்தில், இண்டிகோ விமான போக்குவரத்து சேவை தடையின்றி நடந்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள் செய்து கொடுப்பதாக, விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் தெரிவித்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சேலம் விமான நிலையத்தில் இண்டிகோ விமான போக்குவரத்து, தடையின்றி நேரம் தவறாமல் நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடைகள் இருந்தாலும், சேலத்தில் தடையின்றி விமான போக்குவரத்து நடந்து வருகிறது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேவைகள், உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. சேலம் விமான நிலையத்தில், இரவில் விமானத்தை இயக்க, விரிவாக்க பணிகள் செய்ய வேண்டும். முதற்கட்டமாக கடந்த மாதம் 28ம்தேதி 206 ஏக்கர் நிலத்தை கையாகப்படுத்த, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக இழப்பீட்டு தொகை வழங்க சுமார் ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமானம் இயக்க, ஒரு சில நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கோரப்பட்டுள்ளது. சேலம் விமான நிலையத்தில் இருந்து காலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு, ஜனவரியில் புதிய கூடுதல் விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, விமான நிலைய துணை இயக்குனர் ரமேஷ், எஸ்ஐ முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Salem Airport ,Omalur ,Indigo air ,Airport Director ,Nawshad ,Salem ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி