×

பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் மழையால் தீவனம் தட்டுப்பாடு இல்லை

வேலூர், டிச.10: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ஒட்டுமொத்தமாக ரூ.90 லட்சத்துக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் நேற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் என கால்நடைகள் குவிந்து சந்தை களைக்கட்டியது. இந்த வாரம் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றுடன் கால்நடைகள் உட்பட பிற கால்நடைகளுக்கு தேவைப்படும் பொருட்கள், காய்கறிகள் என்று அனைத்தும் சேர்ந்து வர்த்தகம் ரூ.90 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மழையின் காரணமாக தீவனம் தட்டுப்பாடு இல்லை. இதனால் மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. விற்பனையும் ரூ.90 லட்சத்துக்கு நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்றனர்.

Tags : Poigai cattle market ,Vellore ,Poigai market ,
× RELATED தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5.5 லட்சம்...