×

தாழ்வான சாலையில் தேங்கும் மழைநீர்

திருப்பூர், ஜன.17: திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில், தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒற்றைக் கண் பாலம் அருகே உள்ள சாலை தாழ்வாக இருப்பதால், மழைகாலங்களில் எப்போதும் தண்ணீர் தேங்கி குளம்போல் நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் மழைநீரில் நீந்தி செல்லும் நிலை
உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது தேங்கியுள்ள மழை நீரில் விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். ஆகவே,சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி