×

புழல் ஏரி உபரி நீர் திறப்பு 100 கன அடியாக குறைப்பு

புழல், டிச.8: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி, 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில், 3251 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழை ஓய்ந்ததால் புழல் ஏரிக்கு நேற்று 1240 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 1015 கன அடியாக சரிந்துள்ளது.

சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வரும் உபரிநீர் 500 கன அடியில் இருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 579 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 13.41 அடியில் நீர்மட்டம் உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நேற்று 230 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 46 கன அடியாக சரிந்துள்ளது. 24 மணி நேரமும் ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நீர்வரத்திற்கு ஏற்ப உபரிநீர் திறப்பு பராமரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Puzhal Lake ,Puzhal ,Chennai ,
× RELATED சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை...