×

திண்டிவனம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே தென்பசியார் என்ற இடத்தில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி கார் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியது. சாலை ஓர மரத்தின் மீது கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.

Tags : Dindivanam ,Viluppuram ,Denpasiar ,Chennai ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...