×

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி..!!

சென்னை: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 15.12.2025 to 19.12.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும்.

பயிற்சியின் உள்ளடக்கம்

*இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல்.

*கேரட் மதிப்பீடுகள்.

*ஆசிட் சோதனை.

*எடை அளவு இணைப்பான்

*விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate

*ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும்.

*மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள்.

*தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்

வேலைவாய்ப்பு வழிகாட்டல்

*பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள்.

*மத்திய / மாநில அரசுகள் அரசு கடனுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் கிண்டி, சென்னை 600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : and Jewellery Appraiser ,Entrepreneurship Development and Innovation Institute ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED சென்னையில் இண்டிகோ விமான சேவை இன்று மாலை வரை ரத்து..!