×

அணைக்கட்டு தாலுகாவில் காளைவிடும் விழா ஏற்பாடுகள் தீவிரம் அதிகாரிகள் ஆய்வு

அணைக்கட்டு, ஜன.12: அணைக்கட்டு தாலுகாவில் காளைவிடும் விழாவுக்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இந்தாண்டு பொங்கல் பண்டிகை, அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு தாலுகா உள்பட 64 இடங்களில் மாடுவிடும் விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் முதலில் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட அணைக்கட்டில் பொங்கல் தினத்தன்றே காளைவிடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர். இதில் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ஊசூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் உள்ளிட்ட இடங்கிளில் அனுமதி வழங்கப்பட்டுள்ள கிராமங்களில், விழா நடக்கும் தெருக்களில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : taluka ,Dam ,
× RELATED தாலுகா ஆபீசில் குடிநீர் இல்லை