×

தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி, ஜன. 4: தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், சிதம்பரநகர், ஏரல், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், மேலூர், முதலூர், மூக்குப்பீறி, நாசரேத், நியூகாலனி, ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி, கிறிஸ்தியா நகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லர்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூர், தூத்துக்குடி ஹார்பர் எஸ்டேட், படுக்கப்பத்து ஆகிய அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அஞ்சலக ஆதார் சேவை மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை.குழந்தைகளுக்கு 5-7 வயது மற்றும் 15-17 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயர், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ₹50, புகைப்படம், கைரேகை,கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ₹100 ஆகும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Thoothukudi ,Senior ,Suresh Kumar ,Thoothukudi Post Office… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...