சீர்காழி, டிச. 3:வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்ட சிறப்பு விரைவு ரயில் நேற்று முன்தினம் எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எஸ்.கே.ஆர். நகரில் வசித்து வந்த பழனிவேல்(61) என்ற பைனான்சியர்ரயிலில் விழுந்து பலியானார்.இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிவேல் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
