×

சிவகாசியில் அதிகமாக 88 மிமீ மழை பதிவு

 

விருதுநகர், டிச.3: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் அதிகபட்சமாக 88 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவ.16ல் துவங்கி பெய்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக டிட்வா புயல் காரணமாக பெரும்பான்மையான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் சிவகாசி, வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ) வருமாறு: ராஜபாளையம் 3, காரியாபட்டி 1.20, வில்லிபுத்தூர் 29, விருதுநகர் 4.10, சிவகாசி 88, பிளவக்கல் பெரியாறு 1.20, வத்திராயிருப்பு 4.60, கோவிலாங்குளம் 1.60 மி.மீ மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் 135 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 11.25 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை பெய்தால் விவசாய பணிகள் சிறப்பாக நடைபெறும். இதற்கு இயற்கை கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Tags : Sivakasi ,Virudhunagar ,Virudhunagar district ,Tamil Nadu ,Titva cyclone ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...