×

பைக் விபத்தில் காயமடைந்தவர் பரிதாப சாவு

கேடிசி நகர், டிச.3: சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகேயுள்ள கடையாலுருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (52). கூலித்தொழிலாளியான இவர், சம்பவத்தன்று பைக்கில் சென்றபோது தவறிவிழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். விபத்துகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : KTC Nagar ,Ganesan ,Kadayalurutti Mariamman Kovil Street ,Serendamaram, Surandi ,Nellai Government Hospital.… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...