- தாமிரபரணியாறு
- உடன்குடி
- தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம்
- பனிக்கநாடர்குடியிருப்பு
- மேல்நிலை பள்ளி
- தேசிய காடெட் கார்ப்ஸ்
- குரும்பூர்
- தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்…
உடன்குடி, டிச. 3: தேசிய மாசு கட்டுப்பாட்டு நாளை முன்னிட்டு பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தாமிரபரணி கரையோர பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். குரும்பூர் அருகேயுள்ள பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், தேசிய மாசு கட்டுப்பாட்டு நாளை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரை பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். பள்ளி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். தமிழாசிரியரும், தேசிய மாணவர் படை அலுவலருமான ராஜகுமார் வரவேற்றார். தூய்மை பணியை தலைமை ஆசிரியர் சுரேஷ் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுபேதார் ஜெகத்சிங், சுந்தர் ஆகியோர் வழி நடத்தினர். ஆங்கிலப்பள்ளி முதல்வர் மவுலாதேவி, ஏரல் வியாபாரிகள் சங்க செயலாளர் விஜயராகவன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். கணேசர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவ- மாணவியர் ஏரல் தாமிரபரணி ஆற்றின் உள்பகுதி மற்றும் வெளிப்புறங்களில் உள்ள பாலிதீன் கவர்கள், உடைந்த பாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள், காகித குப்பைகள் ஆகியவற்றை சேகரித்து பேரூராட்சி குப்பை தொட்டியில் சேர்த்தனர்.
