×

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும்: ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவு

டெல்லி: இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம்.

இந்த செயலி எளிதில் தெரியும் மற்றும் இறுதி பயனர்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதையும் அதன் செயல்பாடுகள் முடக்கப்படவில்லை அல்லது கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என ஒன்றிய தொலைத்தொடர்பு துறை கூறியுள்ளது.

தற்போது விற்பனைக்கு உள்ள மொபைல் போன்களிலும் SOFTWARE அப்டேட் மூலமாக செயலி இடம் பெற வேண்டும் எனவும், அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : India ,EU Telecom Department ,Delhi ,
× RELATED ஒன்றிய அரசின் அடுத்த இடி வர்த்தக...