×

கள்ளத்தனமாக மரம் வெட்டி சாய்ப்பு

 

வாழப்பாடி, டிச.1: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலையில், பகுடுபட்டு கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், வசித்து வருபவர் பெரியசாமி. இவர் தனது நிலத்தில் சில்வர் ஒக் மரம் வளர்த்து வருகிறார். இந்நிலையில், அனுமதி இன்றி 3 டன் அளவிலான சில்வர் ஒக் மரத்தை அருகிலுள்ள நபர்கள் வெட்டி சாய்துள்ளனர். இதை கண்ட விவசாயி பெரியசாமி இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் புகார் அளித்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு கருமந்துறை வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மரத்தை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருமந்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Vazhappadi ,Pagudupattu ,Kalvarayan Hills ,Bettanayakkanpalayam ,Salem district ,Periyasamy ,
× RELATED விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது