×

மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்

 

குளச்சல், டிச. 1: மணவாளக்குறிச்சி அருகே கண்டர்விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் ததேயுஸ் மகன் ஜிபின் (20). வெள்ளமோடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கூட்டுமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது தலக்குளம் உடையார்பள்ளம் பகுதியை சேர்ந்த லட்சுமி (24) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராதவிதமாக ஜிபின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜிபின் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடையார்விளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Manavalakurichi ,Kulachal ,George Thaddeus' ,Jipin ,Kandarvilakam ,Vellamodi ,Jottumangalam ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...