×

திருவொற்றியூர் பாலிடெக்னிக் கல்லூரி அடுத்தாண்டு பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்டித்தர வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கே.பி.சங்கர் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விம்கோ நகரில் கூட்டுறவுக்கு துறைக்கு சொந்தமான இடத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், ரூ27.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்டுமான பணி துவக்கப்பட்டது. 98480 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளம், 15 வகுப்பறைகள், 4 தொழில் பயிற்சி கூடம், ஆய்வகம் மற்றும் வரைவு அறைகள் உள்பட நவீனமுறையில் கட்டிடம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை பணிகளை ஆய்வு செய்தார். அங்கு ஐடிஐ வளாகம் கட்டுமான பணியையும் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது உறுப்பினர் செயலாளர் பிரகாஷ், செயற் பொறியாளர் துர்கா, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டலகுழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட பலர் இருந்தனர்.

இதன்பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; தமிழக முதல்வரின் ஆணையின்படி ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரி கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகளை பிப்ரவரி மாதம் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவொற்றியூர், ஆர்.கே.நகர், மாதவரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இது இருக்கும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுவரையில் மூன்று படைப்பகம், நூலகங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் 10 நூலகங்களை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் சிந்தையில் உதித்த இந்த திட்டம். ஆர்.கே. நகரில் 2 இடங்களில் படைப்பகம், நூலகம், ஐபிஎஸ், ஐஆர்எஸ் தேர்வுக்கு பயிற்சி தரக்கூடிய கல்லூரியும் துவக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு படைப்ப கத்திலும் 450 பேர் படிப்பதற்கும் வசதி இல்லாதவர்கள் படிப்பகங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ஐபிஎஸ், ஐஆர்எஸ் தேர்ச்சிக்கு படிக்கின்ற மாணவர்கள் ஒரு நாளைக்கு 120 பேர் இரண்டு ஷிப்டுலாக பயின்று வருகின்றனர். வீட்டில் கல்வி கற்க முடியாத சூழல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த திட்டம். பொது மக்களிடம் வரவேற்பு பெற்று இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Tags : Thiruvotiyur Polytechnic College ,Minister ,P. K. ,Sekarpapu ,Thiruvotiyur ,Government Polytechnic College ,Thiruvotiyur, Chennai ,K. Stalin ,K. B. Shankar ,MLA ,Chennai Metropolitan Development Group ,Vimco ,
× RELATED ஒன்றிய அரசின் அடுத்த இடி வர்த்தக...