×

எஸ்.பி. அலுவலகத்தில் குற்ற வழக்குகளை கையாள்வது குறித்த கூட்டம்

திருப்பூர், நவ. 29: திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அசோக் கிரிஸ் யாதவ் தலைமையில், குற்ற வழக்குகளை எப்படி கையாள்வது என்பது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்தது.

அதில் அரசு வக்கீல் கனகசாபாபதி மற்றும் மாவட்ட குற்றத்துறை உதவி இயக்குநர் ரமேஷ், கூடுதல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் குற்றத்துறை அரசு வழக்கறிஞர்கள், உதவி அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதுபோல் குற்ற வழக்குளில் உள்ள இடா்பாடுகளை கையாள்வது குறித்தும் விளக்கமாக பேசப்பட்டது.

 

Tags : S.P. ,Tiruppur ,Tiruppur District S.P. ,Ashok Kris Yadav ,Tiruppur District Coordination Committee ,Kanakasabapathy… ,
× RELATED நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை கோரி மனு