×

அரசு கல்லூரி மாணவிகள் சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

மதுரை, நவ. 29: மதுரையை அடுத்த கள்ளந்திரி பகுதியில் மீனாட்சி அரசு ெபண்கள் கல்லூரி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் வானதி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இணைப்பேராசிரியர் மீனாட்சி வரவேற்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரான உதவி பேராசிரியர் பாண்டி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரி, மீனாட்சி கல்லூரி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரா, கள்ளந்திரி ஊராட்சி செயலாளர் பாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற காளான் வளர்ப்பு மற்றும் பாலின சமத்துவம் குறித்த சிறப்பு கருத்தரங்குகள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கள்ளந்திரியின் பல்வேறு பகுதிகள் வழியாக நடைபெற்றது. போதையால் ஏற்படும் தீமைகள், உடல்நலக்குறைபாடு உள்ளிட்டவை குறித்து மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அப்பன்திருப்பதி கால்நடை உதவி மருத்துவர் ராமலட்சுமி கலந்து கொண்டு ஆடு, மாடுகளுக்கு பரிசோதனை நடத்தி, பாதிப்பு கண்டறியப்பட்டவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மணாணவிகள் செய்திருந்தனர்.

 

Tags : Madurai ,National ,Meenakshi Government Women's College ,Kallandhiri ,Vanathi ,National Welfare Project Officer ,Associate Professor… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...